சீனாவிலிருந்து இலங்கை வரும் விமானங்களுக்கு தனி தரிப்பிடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமான சேவை மற்றும் விமான நிலைய கட்டுப்பாட்டாளர், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை விமான பிரதிநிதிகள் வாரியம் (BAR) மற்றும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும் தனித்தனியாக தரிப்பிடம்  ஒதுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.