கம்பஹா மாவட்டத்திலுள்ள மக்கள்  நீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீரின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், நீருக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர, வேறு தேவைகளுக்காக குடிநீரைப் பயன்படுத்த வேண்டாமென, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை தொடர்ந்தால் எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் நீர் விநியோகம் வரையறுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.