நாட்டின் பல பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பதுளை - எல்ல
புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை எல்ல - 9 ஆம் பலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்ட நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துளளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.
விபத்தின் போது தெமோதரை - பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தெமோதரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
பெலியத்த
இதேவேளை, பெலியத்த - ஹக்மண பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ள்ளார். மின்சார திருத்த பணிகளில்ஈடுப்பட்ட ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பெலியத்த - ஹக்மண லன்தேவில பகுதியில் இரண்டு மின்சார திருத்த பணியாளர்கள் மின்கம்பத்தின் மீது மின்சார புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதன் போது பெலியத்த பிரதேசத்திலிருந்து ஹக்மன நோக்கி பயணித்த லொறி கட்டுப்பாட்டை இழந்து குறித்த மின் கம்பத்தின் மீது மோதியுள்ளது.
இந்நிலையில் மின் கம்பத்தின் மீதி பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பணியாளர்களும் கீழே விழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்தின் போது பலத்த காயங்களுக்குள்ளான இருவரும் பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் தங்கல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
59 வயதுடைய லக்மன பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரழந்துள்ளார். ,சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டு நிலையில் மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
அக்மீமன
அத்துடன் , அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகள விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி வேகா கட்டுப்பாட்டையிழந்து பாதையில் எதிர் திசையில் வந்த ஜீப் ரக வாகனத்தில் மோதியுள்ளது.
இதன் போது முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர். விபத்தில் 28 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் ஜீப் ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணிகளை அக்மீமன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வேயங்கொட
இதேவேளை, வேயங்கொட - நிட்டம்புவ புனித மரியாள் வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க நோக்கி பயணித்த கார் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கில் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். 19 வயதுடைய கண்டி பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை வெயாங்கொட பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM