யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தைப்பொங்கல் தினத்தன்று இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, 8 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேக நபர்களான 8 இளைஞர்களும், தலா 5 ஆயிரம் ரூபா  ரொக்க பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.