(எம்.ஆர்.எம்.வஸீம்)
வடகிழக்கு பிராந்தியத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட 7ஆயிரம் வீடுகளில் 4500 வீடுகளை வன்னி மாவட்டத்தில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான காதர் மஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை நிர்மாணித்து வழங்குவதற்காக தோட்ட உட்கட்டமைப்பு சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற உயரதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
மேலும் வடக்கு கிழக்கில் வீடற்ற மக்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் கொங்கிரீட் சட்டக பொருத்து வீடுகளை நிர்மாணித்தல், இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து நாடு திரும்பிய மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்களை நிர்மாணிக்க குடும்பமொன்றுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்குதல், நீண்டகாலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடற்றிருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வினைக் காண நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM