(ரொபட் அன்­டனி)

அர­சி­ய­ல­மைப்பின்  13ஆவது திருத்த  சட்­டத்தில் இருக்­கின்ற பொலிஸ் அதி­கா­ரத்தை  மாகா­ண­ச­பை­க­ளுக்கு   ஒரு­போதும் வழங்க முடி­யாது.  அது  ஒரு சாத்­தி­ய­மற்ற ஏற்­பா­டா­கவே  காணப்­ப­டு­கின்­றது என்று அர­சாங்­கத்தின் பேச்­சா­ளரும்  இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.     

எனினும் காணி அதி­கா­ரங்கள்   தொடர்பில்  ஆணைக்­கு­ழு­வொன்றை அமைத்து ஆராய முடியும் என்றும்   கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல்ல  குறிப்­பிட்டார்.    மாகா­ண­சபை  முறை­மையில் காணப்­படும் பொலிஸ் மற்றும் காணி அதி­காரம் தொடர்­பாக  ஏற்­பட்­டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில்   குறிப்­பி­டு­கை­யி­லேயே   அவர் இதனை  குறிப்­பிட்டார்.  இது தொடர்பில் அர­சாங்­கத்தின் பேச்­சாளர் கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல குறிப்­பி­டு­கையில்,  

13ஆவது திருத்த சட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள  பொலிஸ் அதி­கா­ரத்தை  மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கு­வது  சாத்­தி­ய­மான  விட­ய­மல்ல.  அது யார்த்­த­மற்ற   விட­ய­மாகும்.  பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கினால்  பல்­வேறு  தேவை­யற்ற பிரச்­சி­னைகள் உரு­வாகும்.   கடந்த காலத்தில் உரு­வாக்­கப்­பட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபில் ஒவ்­வொரு மாகா­ணங்­களும் தமக்கு ஏற்­ற­வாறு  பொலிஸ் சீரு­டை­களை மாற்ற முடியும் என்ற ஏற்­பா­டு­களும் காணப்­பட்­டி­ருந்­தன.   எனவே  பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்­கு­வது என்­பது தேவை­யற்ற பிரச்­சி­னை­களை  உரு­வாக்­க­ுவ­தா­கவே அமையும். உதா­ர­ண­மாக மேல் ­மா­கா­ணத்தில் ஒருவர்  குற்­றத்தை புரிந்­து­விட்டு  வட­மா­கா­ணத்­திற்கு சென்­று­விட்டால்  உள­வுப்­பி­ரி­வினர் கூட அந்த சந்­தே­க­ந­பரை கைது செய்ய வடக்கு முத­ல­மைச்­சரின் அனு­ம­தியைப் பெற­வேண்­டிய நிலைமை ஏற்­படும்.  இலங்கை போன்ற ஒரு நாட்­டுக்கு இது  பொருத்­த­மான விட­ய­மாக அமை­யாது.  எனவே  பொலிஸ் அதி­காரம் என்­பது  வழங்­கப்­பட முடி­யா­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.  அதனால் அது தொடர்பில் தொடர்ந்து பேசிக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்­த­மில்லை. இந்த விட­யத்தில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவும் மிகவும்  உறு­தி­யாக   இருக்­கின்றார்.  எனினும்  காணி அதி­காரம் தொடர்பில்   ஆராய்ந்து பார்க்­கலாம்.  அதா­வது   காணி ஆணைக்­கு­ழுவை அமைத்து  காணி அதி­கா­ரங்கள் தொடர்பில்  பரி­சீ­லிக்­கலாம்.  ஆனால் பொலிஸ் அதி­காரம் என்­பது சாத்­தி­ய­மற்­ற­தா­கவே உள்­ளது.

இதே­வேளை  வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக  அனைத்து தரப்­பி­ன­ரு­டனும்   பேச்சு நடத்­த­வேண்டும் என்­பதே எமது நிலைப்பாடாகும்.  தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின்     ஏக பிரதிநிதிகள் அல்ல.  வடக்கு, கிழக்கில்  பொது அமைப்புக்கள், உள்ளூராட்சிமன்ற  பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப் பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண் டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என் றார்.