பிரேசிலில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, அந்த சிறுமியின் இதயத்தை பிடுங்கி எடுத்த கொடூரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரேசிலில் மினாயிஸ் ஜெராய்ஸ் மாகாணத்தை சேர்ந்த சிறுமி ரெயானா அபரேசிதா காண்டிடா , பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த வேளை அங்கு வந்த ஜெய்ரோ லோப்ஸ் (வயது 42) என்ற நபர், சிறுமி ரெய்னாவை பின் தொடர்ந்து சென்று கடத்தி சென்றுள்ளார்.

பின் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றுவிட்டு, அவளது இதயத்தை வெட்டி எடுத்துவிட்டு, அவனது வீட்டின் பின்புறம் சிறுமியின் உடலை புதைத்துவிட்டார். 

 

சிறுமியைக் காணாத பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிஸ், லோப்ஸை கைது செய்து விசாரித்ததில், நடந்த உண்மையை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தபோது, உடலில் இதயம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் 500 பேர் ஆவேசத்துடன் திரண்டு கொடூர காமுகனை அடித்து கொல்ல வேண்டும் என வலியுறுத்தினர். 

எனவே, கைது செய்யப்பட்ட ஜெய்ரோ லோப்ஸ் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டான்.