திருகோணமலை துறைமுப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நீதிமன்ற வீதியில் நெடுங்காலமாய் இயங்கி வந்தவிபச்சாரம் நிலையம் இன்று பிராந்திய போதைபொருள் ஒழிப்புபிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

சுற்றிவலைப்பின் போது விடுதி நடத்துனர் உட்பட திருகோணமலை பிரதேசங்களைச் சேர்ந்தபெண்கள் உட்படநால்வர் கைது செய்ததாக பிராந்திய போதைபொருள் ஒழிப்புபிரிவினர் தெரிவித்தனர். 

கைதுசெய்யப்பட்ட நபர்கள் திருகோணமலை நகர்மனையாவலியைச் சேர்ந்த  49 வயதுடைய ஆண் ஒருவரும், கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த  28 வயதுடைய ஒருவரும் , மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரும் , மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த  30 வயதுடைய ஒருவரும் உள்ளடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர் .

கைசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய தலைமையக பொலிஸார் வசம் ஒப்படைத்தாக பிராந்திய போதைபொருள் ஒழிப்புபிரிவினர் தெரிவித்தனர்.