பல் கூச்சம் காரணமாக சிலருக்கு முன் வரிசைப் பற்கள் வலிமையிழந்து விழ ஆரம்பிக்கும் அல்லது ஆடும் இதற்கு தற்போது நவீன சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது என வைத்தியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். 

எம்முடைய பற்களுக்கு இயற்கையாகவே தட்பவெப்ப சூழல்களை ஏற்றுக்கொள்ளும் திறன் உள்ளது. உதாரணத்திற்காக 70 டிகிரி செல்சியஸ் அளவிற்கு சூடான கோப்பியையும்,  1.5 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நீரையும் தாங்கும் சக்தி உண்டு. 

குளிர்காலத்தில் அல்லது பனிகாலத்தில் அதிகாலையில் வெளியே செல்லும் பொழுது தட்பவெப்பம் வேகமாக மாறும். இதனால் பற்கள் மீது ஒருவிதமான அழுத்தம் உண்டாகும். இந்த அழுத்தம் நாளடைவில் பற்களுக்குள் விரிசல்களை ஏற்படுத்தும். இந்த விரிசல்கள் தான் நாளடைவில் பல் கூச்சம் அல்லது பல் வலி ஏற்பட காரணமாகின்றன. 

இதற்கு வைத்தியர்களின் ஆலோசனைப்படி பிரத்தியேக மருந்தினை பூசிக்கொள்ள வேண்டும். 

சிலருக்கு பற்கூச்சத்தின் காரணமாக முன் வரிசைப் பற்கள் தங்களது வலிமையையிழந்து ஆட்டம் காணத் தொடங்கும். அத்தருணத்தில் பரிசோதனை செய்து பற்களின் வலிமை இழப்பிற்கு காரணமான எலும்புகள், ஈறுகள் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். சிலருக்கு பற்களில் உட்புறத்தில் பக்டீரியா போன்ற கிருமிகள் இருக்கக்கூடும். இதனை அப்புறப்படுத்திவிட்டு ஸ்பிளின்டிங் (Splinting) எனப்படும் சிகிச்சையை மேற்கொண்டால் பற்கள் ஆடுவதிலிருந்து முழுமையான நிவாரணம் பெறலாம்.