எதிர்­வரும் மார்ச் மாதம்  முதலாம் திகதி ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை அறி­விப்பார். அதன் மூல­மாக புதிய அர­சாங்­கத்தை அமைத்து வர­வு–­செ­ல­வுத்­திட்­ட­மொன்றை முன்­வைக்க முடியும் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

சில  தினங்­க­ளுக்கு முன் காலிப் பகு­தியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

கடந்த  2015ஆம் ஆண்டு  உரு­வாக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றமே  எமக்கு கிடைத்­தி­ருக்­கி­றது. ஸ்திர­மற்ற  பாரா­ளு­மன்­றத்­துக்குப் பதி­லாக பல­மான  ஸ்திர­மான  ஒரு பாரா­ளு­மன்­றமே  நாட்­டுக்கு  அவ­சி­ய­மாக இருக்­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக பாரா­ளு­மன்­றத்தை நான்­கரை வரு­டங்கள் முடியும் வரை  ஜனா­தி­ப­தி­யினால் கலைக்க முடி­யாது.  

முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் உரு­வாக்­கிய சட்­டங்­க­ளினால் முழு­நாட்­டையும்  குழப்­பி­யி­ருக்­கின்­றனர்.   எனவே மார்ச் மாதம் 1ஆம் திகதி ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக்ஷ பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை நடத்த நட­வ­டிக்கை எடுப்பார்.  

அத­னூ­டாக  புதி­ய­தொரு பாரா­ளு­மன்றம் உரு­வாகும். அதன் மூல­மாக நாட்டை புதி­ய­தொரு பாதைக்கு கொண்­டு­செல்ல முடியும். புதிய வேலைத்­திட்­டங்­களை உரு­வாக்க முடியும். அத்­துடன்  புதிய பாராளுமன்றம் அமைந்த பின்னர்  வரவு–செலவுத்திட்டத்தை  சமர்ப்பித்து  நாட்டை  பலமான அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்வோம் என்றார்.