வடமேல் மாகாணசபை உறுப்பினர் சுமித் ராஜபக்ஷ, கிரியுள்ள மெதகம்பள பாடசாலை அதிபரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

வெசாக் பந்தல் அமைப்பதற்காக பாடசாலை மைதானத்தை கோரியிருந்த நிலையில் அதற்கு பாடசாலை நிர்வாகம்  அனுமதியளிக்காத காரணத்தினாலேயே குறித்த பாடசாலை அதிபருக்கு மாகாணசபை உறுப்பினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவிக்கையில்,

தமது அரசியல் பலத்தை பயன்படுத்தி சில அரசியல்வாதிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாம் மாகணசபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகியுள்ளோம் என தெரிவித்தார்.

இதேவேளை மஹிந்த ஜயசிங்க குறித்த அதிபரிடம் கலந்துரையாடியதோடு, அலவ்வ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடொன்றையும் முன்வைத்துள்ளார்.