பாக்கிஸ்தானின் லாகூரில், எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 11 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாசனை திரவியம் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை ஒன்றில் நேற்றையதினம் (28) குறித்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் வேளை செய்து கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிய சத்ததுடன் ஏற்பட்ட வெடிப்பையடுத்து தொழிற்சாலையின் கூரை தீப்பிடித்து எரிந்ததுள்ளதுடன் அது அருகிலுள்ள வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளது. சம்பவஇடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
வெடிப்பு குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM