ஜனாதிபதி மாளிகையை இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.  குறிப்பாக இன்று மாத்திரம் 15 ஆயிரத்துக்கும்  அதிகமானோர் வருகை தந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையானது வரலாற்றில் முதற் தடவையாக கடந்த 8 ஆம் திகதி முதல் மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.

மூன்றாவது நாளாகிய இன்று பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும்  அதிகமானவர்கள் வருகை தந்துள்ளனர்.

மேலும், இதுவரை 40 ஆயிரம் நாடளாவிய ரீதியில் இருந்து வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையானது 29 ஆளுனர்கள் மற்றும் 6 ஜனாதிபதிகள் தமது அலுவலக பணிகளுக்காகவும் தங்களின் வாசஸ்தலமாகவும் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு வரலாற்று சான்றுகளை பிரதிபலிக்கும் புகைப்படங்கள், முன்னாள் ஆளுனர்களினதும் ஜனாதிபதிகளினதும் புகைப்படங்கள் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள்  ஜுன் 14 திகதி மாலை 7 மணிவரை ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.