யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் சிறந்த நடவடிக்கையில் பாதிக்கப்படும் சாரதி காப்பாளர்களைக் கவனத்தில் கொள்ளாத இலங்கை போக்குவரத்துச் சபையின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களுக் கான சேவை பாதிக்காத வகையில் நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ் மத்திய பஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராக்கள் செயலிழந்த நிலையில் நாளாந்தம் வருகை தரும் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் பஸ் நிலையத்தில் இடம்பெறும் சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்த பஸ்  நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண்அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தைச் சேர்ந்த சாரதிகள் காப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.