அரசியல் கைதிகளைப் பணயம் வைத்து படையினரை விடுதலை செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது - சுமந்திரன்

Published By: Daya

29 Jan, 2020 | 11:08 AM
image

தமிழ் அரசியல் கைதிகளைப் பணயம் வைத்து சிறைகளில் உள்ள படையினரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான அரசாங்கம் முயற்சிக்கின்றது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த விடயம் தொடர்பாக நாங்கள் அதிகளவான நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். அதன் விளைவாகச் சிறைகளிலிருந்த அரைவாசிக்கும் அதிகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் அதனை நாம் ஒரு பொறிமுறை ஊடாக செயற்படுத்தினோம். ஆனால் பலர் அந்த பொறிமுறை செயற்படுத்தப்படவில்லை.

அதற்குக் காரணம் சில சட்டத்தரணிகளே. அதனாலேயே சிறையில் உள்ள மிகுதி அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. ஆனாலும் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் விடயமாக நாங்கள் இந்த அரசாங்கத்துடனும் பேசியிருக்கின்றோம். சுமார் 50ற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள்.

எனவே அவர்கள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் ஊடாக மட்டுமே விடுதலை செய்ய முடியும். இந்நிலையில் ஜனாதிபதியும் அவருடன் சேர்ந்திருக்கும் சிலரும் இரு தரப்புக்கும் குறிப்பாகத் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் சிறையில் உள்ள இராணுவத்திற்கும் பொதுமன்னிப்பு கொடுத்து விடுதலை செய்யலாம் எனப் பேசத் தொடங்குகின்றனர்.

அவர்கள் இப்படிப் பேசுவார்கள் என்பது எமக்கு முன்பே தெரியும். இப்போதுதான் அறிந்த விடயமல்ல. ஆனால் படையினரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது. காரணம் தமிழ் அரசியல் கைதிகள் பல காலமாகச் சிறைகளில் இருக்கிறார்கள். 

பலர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளார்கள். அதன் அடிப் படையில் தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் படையினரை யாரும் நீதிமன்றில் நிறுத்தப் பட்டு குற்றவாளிகளாகக் காணப்படவோ அல்லது தீர்ப்பளிக்கப்படவோ இல்லை. ஆகவே தமிழ் அரசியல் கைதிகளும், படையினரும் சரி சமமாகப் பார்க்கப்படவேண்டுமானால் நாங்கள் மேலே கூறியது நடக்கவேண்டும்.

ஆனால் அதை இப்போது இவர்களால் செய்ய முடியாது. இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகளைப் பணய கைதிகளாக வைத்துக் கொண்டு படையினரை விடுதலை செய்யவும், அரசுக்கு எதிரான குற்றங்களைக் கைவிடுங்கள் எனக் கேட்கவும் அரசு இப்போது துணிந்திருக்கின்றது. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அதற்கு இசைந்து கொடுக்கப்போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39
news-image

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...

2025-02-19 12:30:27
news-image

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...

2025-02-19 12:21:04
news-image

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...

2025-02-19 12:17:07
news-image

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும்...

2025-02-19 12:24:25
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; தந்தையும்...

2025-02-19 11:52:53
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:49:47
news-image

குடா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி...

2025-02-19 12:02:47
news-image

24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு -...

2025-02-19 11:34:39
news-image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சுமந்திரன்...

2025-02-19 11:02:39