கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  உயிரிழந்தவர்களின் (29) எண்ணிக்கை 132 ஆக உயர்ந்ததுள்ளதாகவும் ஒரே நாளில் 1500 புதிய நோயாளிகள்  இனங்காணப்பட்டுள்ளதாகவும்  சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது

இதன் படி கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 1,459 அதிகரித்ததை அடுத்து மொத்த நோயாளர்களிக் எண்ணிக்கை 5,974 உயர்ந்துள்ளது.

பாதிப்பு கண்டறியப்பட்ட 5,974 நோயாளர்களில் 1,239 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதே வேளை 103 நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உறுதிப்படுத்தப்படாத நோயாளர்களின் எண்ணிக 9,239 ஆக உயர்ந்துள்ளதாக சீன ஊடங்கள் தெரிவித்துள்ளன.

உலகளவில் இதுவரை 18 நாடுகளில் 82 நோயாளிகள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் நாடுகள் ரீதியாக பார்க்கும் போது

1 நோயாளி  - இலங்கை, நேபாளம், கம்போடியா, 

2 நோயாளிகள்- வியட்நாம், கனடா

4 நோயாளிகள் - வடகொரியா, பிரான்ஸ்,ஜேர்மனி

5 நோயாளிகள்- மாக்கோ,அவுஸ்திரேலியா, சிங்கப்பூர்,  அமெரிக்கா

6 நோயாளிகள் -  ஜப்பான்

7 நோயாளிகள் - மலேசியா

8 நோயாளிகள் - ஹொங்கொங்,தாய்வான்

14 நோயாளிகள் -  தாய்லாந்து

ஆகிய எண்ணிக்கைகளில் அடங்குகின்றனர்.

நோயை கட்டுபடுத்துவதற்காக சீனாவில் வுஹான் உட்பட 15 நகரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் சீனா நேற்றைய தினம் தமது நாட்டின்  தலைநகர் டேக்கியோவுக்கான அதிவேக இரயில் சேவையை கட்டுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.