புத்தளம் நகரில் கடைத் தொகுதியின் மாடியில் இனந்தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று பிற்பகல் கண்டுப்பிடிக்கப்பட்டது.

அப்பகுதி மக்களுக்கு கடைதொகுதியின் மாடியில் துர்நாற்றம் வீசியதையடுத்து தேடிச் சென்ற வேளையில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.

இதன்போது புத்தளம் பொலிசாருக்கு தகவலை வழங்கியுள்ள நிலையில் குறித்த இடத்திற்கு பொலிசார் நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதோடு பல நாட்களுக்குமுன்பே உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர். 

கொலையா,  தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என்று விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.