(எம்.எப்.எம்.பஸீர்)

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 18, 19, 20 ஆம் திகதிகளில் விசாரணை செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போதே  இவ்வாரு வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது.

ஏற்கனவே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சட்டத்துக்கு முரணானது என அவர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை ஆட்சேபத்தை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது வழக்கு விசாரணைக்கு திகதியிட்ட போதும், வழக்கின் 2 ஆம் பிரதிவாயதியான ஆனந்தி சசிதரனின் சட்டத்தரணி வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாக இடையீட்டு மனுவூடாக அறிவித்த நிலையிலேயே இன்று மீள திகதி குறிக்கப்பட்டது.