சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன பிரஜைகளுக்கு இலங்கையிலுள்ள சீன தூதரகம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

இந்நிலையில் தங்களது இலங்கைச் சுற்றுலாத் திட்டத்தை இரத்துச் செய்து, சனத்தொகை அதிகமாக மற்றும் நெரிசலாக உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தூதரகம் சீன நாட்டவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை இலங்கையில் தடுக்கும் திட்டமாகவே இது அமைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.