வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனப் பகுதிகளிலிருந்து இராஜதந்திரிகளையும், தமது குடிமக்களையும் வெளியேற்ற உலகெங்கிலும் உள்ள நாடுகள் திட்டமிட்டுள்ளன.

அதன்படி பிரான்ஸ், வடகொரியா, ஜப்பான், கஸகஸ்தான், ஜேர்மனி, மொராக்கோ, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ரஷ்யா, மியன்மார் மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்களே இவ்வாறு தனது நாட்டு பிரஜைகளையும், இராஜதந்திரிகளையும் சீனாவிலிருந்து நாட்டுக்கு அழைத்துவர இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரான்ஸ் : வுஹானிலிருந்து தமது நாட்டினை கொண்டுவர பிரான்சின் முதல் விமானம் புதன்கிழமை பாரிஸிலிருந்து புறப்பட்டு, மறுநாள் சீனாவிலிருந்து தமது பிரஜைகளுடன் நாடு திரும்பும். இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்படும் அனைவரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இரண்டாவது விமானம் ஒன்றையும் சீனாவுக்கு அனுப்பி தமது பிரஜைகளை வரவழைக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. எனினும் இதற்கான உறுதியான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

தென்கொரியா : தென்கொரியா தனது பிரஜைகளை வுஹானிலிருந்து அழைத்துவர விசேட விமானங்களை இந்த வாரம் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

ஜப்பான் : இன்றிரவு ஜப்பான் தமது நாட்டு பிரஜைகளை அழைத்துவர வுஹானுக்கு ஒரு சிறப்பு விமானத்தை அனுப்பவுள்ளது. இந்த விமானத்தில் சுமார் 200 பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர முடியும். எனினும் சுமார் 650 பேர் வரை நாடு திரும்புவார்கள் என்றும் ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

அதனால் டொக்கியோ புதன்கிழமைக்கு முன்னதாக வுஹானுக்கு அதிக விமானங்களை அனுப்ப ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறு அழைத்து வரப்படுபவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள்ளானவர்கள் டோக்கியோவின் ஹனெடா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவார்கள்.

அதே நேரத்தில் வைரஸ் அறிகுறிகள் இல்லாதவர்கள் வீட்டிற்கு செல்லலாம். எனினும் அவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும்.

கஸகஸ்தான் : தமது நாட்டைச் சேர்ந்த 98 மாணவர்களை வுஹான் நகரத்தை விட்டு வெளியேற்ற அனுமதிக்குமாறு பீஜிங்கிற்கு கஸகஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளதாக அந் நாட்டு வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

ஜேர்மனி : சீனாவின், வுஹான் நகரில் வாழும் தமது நாட்டைச் சேர்ந்த 90 பேரை வெளியேற்றும் நடவடிக்கையை ஜேர்மனி ஆரம்பித்துள்ளது.

மொராக்கோ : வுஹான் பகுதியில் பெரும்பாலும் மாணவர்களை உள்ளடக்கிய 100 தமது நாட்டுப் பிரஜைகளை வெளியேற்ற மொராக்கோ அரசாங்கம் ஸ்பெயின், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

அமெரிக்கா : அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தனது வுஹான் தூதரகத்தின் உதவியுடன் தமது பிரஜைகளை அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பல அமெரிக்கர்கள் ஜனவரி 28 திகதி வுஹானிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு அழைத்து வரப்படவுமுள்னர்.

பிரிட்டன் : பிரிட்டன் மற்றும் ஏனைய வெளிநாட்டு பிரஜைகளை வுஹானை விட்டு வெளியேற உதவும் திட்டம் தொடர்பில் பங்காளி நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

கனடா : வுஹான் பகுதியில் உள்ள 167 பிரஜைகளை தமது நாட்டுக்கு கொண்டுவருதற்கான நடவடிக்கையை கனடாக எடுத்துள்ளது. 

இதுதவிற மேலும் எட்டு பேர் சீனாவில் உள்ள கனட தூதரக உதவியை நாடியுள்ளனர், 

ரஷ்யா : ஹூபே மாகாணத்திலுள்ள தனது நாட்டினை அழைத்துவருவதற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரஷ்யாவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்து : நெதர்லாந்து அரசாங்கம் வுஹானில் உள்ள தனது நாட்டின் 20 பிரஜைகளை அழைத்துவருவதற்கான மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

மியன்மார் : மியான்மாமர் அரசாங்கம் வுஹானில் உள்ள தமது நாட்டைச் சேர்ந்த 60 மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தயுள்ளது.

எனினும் குறித்த மாணவர்களை 14 நாட்களுக்கு பின்னர் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையையும்  மியன்மார் எடுத்துள்ளது.

வெடிப்பின் மையப் புள்ளியாகவும், 11 மில்லியனுக்கும் அதிகமான சனத் தொகையை கொண்டதுடதுமான ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவே தற்போதும் உள்ளது.