தேசிய வளங்களை பிறநாட்டவருக்கு தாரைவார்ப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல -  மஹிந்த ராஜபக்ஷ 

Published By: R. Kalaichelvan

28 Jan, 2020 | 06:25 PM
image

தேசிய வளங்களை பிறநாட்டவருக்கு தாரைவார்ப்பது எமது அரசாங்கத்தின் கொள்கையல்ல, எம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுங்க தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் என்ற அடிப்படையில் சுங்க திணைக்களத்திற்கு இதுவரையில் நான்கு முறை மாத்திரமே வருகை தந்துள்ளேன். சர்வதேச சுங்க தினம் ஜனவரி மாதம் 26ம் திகதி கொண்டாடப்படுகின்றன.உலக சுங்க அமைப்பு 1952ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி உருவாக்கப்பட்டது இருப்பினும் இலங்கை சுங்க திணைக்களம் 210 வருட கால பழமைவாய்ந்தது.

 இலங்கையில் சுங்க சேவை 1806ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த திணைக்களம் பழமையானதுடன் தேசிய பொருளாதார முன்னேற்றத்திலும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது.ஆகவே இந்த திணைக்களத்தினை பாதுகாப்பது எமது பிரதான எதிர்பார்ப்பாகும்.

தேசிய பொருளாதாரத்தில் 60 சதவீத பங்களிப்பினை சுங்க திணைக்களம் வழங்குகின்றது. இந்த நிதி அபிவிருத்தி நடவடிக்கைளுக்கு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. ஆகவே சுஙற்க திணைக்களத்தினர் மிக  பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

சுங்க திணைக்களம் தேசிய பாதுகாப்புடன் நேரடி தொடர்புக் கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் போது அதில் சுங்க திணைக்களத்தின் ஒத்துழைப்பு பிரதானமாக காணப்படும்.

தேசிய வளங்களை பிறநாட்டவர்க்கு தாரைவார்ப்பது எமது அரசாங்கத்தின் கொள்கையல்ல, கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தேசிய வளங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்பட்டன இவற்றினை கருத்திற் கொண்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை முழுமையாக பாதுகாக்கப்படும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18
news-image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக...

2025-06-21 20:40:23
news-image

இலஞ்சம் பெற்றதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ...

2025-06-21 20:01:07
news-image

மோசடியான முறையில் தேசிய மக்கள் சக்தி...

2025-06-21 15:05:15
news-image

மோதல் நிலைமை தனியும் வரை இஸ்ரேலுக்கு...

2025-06-21 17:09:55
news-image

பதுளை - துன்ஹிந்த வீதியில் பஸ் ...

2025-06-21 21:07:22