கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பூநகரி பகுதியில் காடுகளை அழித்து பெறுமதிவாய்ந்த மரக்குற்றிகளை சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், நேற்று  பூநகரி முலங்காவில் பகுதியிலிருந்து சட்டவிரோதமாகக் கிளிநொச்சி நகர்ப் பகுதிக்குச் சிறு கனரக வாகனத்தில் மரங்கடுத்துவதாக கிளிநொச்சி பூநகரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய  சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். 

இதன் போது, பூநகரி பொலிஸார் முதிரைமரக்குற்றிகள் மற்றும் வாகனத்தையும் கைப்பற்றியதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர் .

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையைக் கிளிநொச்சி பூநகரி பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.