(இராஜதுரை ஹஷான்)

சீனாவின் வுஹான் நகரில் உள்ள 30 இலங்கையர்களை உடனடியாக   இலங்கைக்கு திருப்பியனுப்புமாறு அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு   சீன அதிகாரிகள் இதுவரையில் இணக்கம் தெரிவிக்கவில்லை என சர்வதேச உறவுகள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அத்துடன் வுஹானில் சுகாதார வசதிகள் முழுமையாக   வழங்கப்படுவதனால் அவர்களின் உறவினர்கள் அச்சம்  கொள்ள தேவையில்லை எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்தப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சீனாவிலிருந்து நேற்றைய தினம் 103 இலங்கையர்கள் வருகை தந்துள்ளார்கள், மேலும் 204 பேரை அழைத்து வருவதற்கான நடவடிக்கை துரிமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் இதன்போது கூறினார்.