Huawei நிறுவனம் தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த தகவல்களுக்கு அமைவாக, அந்நிறுவனம் இலங்கையில் இரு புதிய அடிப்படை ஸ்மார்ட்போன் வடிவங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. நாட்டில் அடிப்படை ஸ்மார்ட்போன் சந்தையானது மிகவும் போட்டித்திறன் கொண்டதாக காணப்படுகின்ற நிலையில், அதனை இலக்காகக் கொண்டு இச்சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
நிறுவனத்தின் தகவல்களின் பிரகாரம்பவ் மிகவும் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Y தொடர் ஸ்மார்ட்போன் உற்பத்திகளின் கீழ் இச்சாதனங்கள் வெளிவரவுள்ளதுடன் இலங்கையில் கறுப்பு, பொன் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கவுள்ளது.
எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், மிகச் சிறந்த கமரா அனுபவம், அதிக வேகம் கொண்ட இணைப்புத்திறன் மற்றும் நியாயமான விலை ஆகிய அனைத்து அம்சங்களையும் எதிர்பார்த்துள்ளவர்களுக்காகவே இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இரு ஸ்மார்ட்போன்களும் 1GB RAM மற்றும் 8GB உள்ளிணைக்கப்பட்ட தேக்ககம் மற்றும் அதிகரிக்கப்படக்கூடிய தேக்கக ஆதரவுடன் வெளிவரவுள்ளன. நிறுவனத்தின் தகவல்களின் பிரகாரம் இரு புதிய Huawei கையடக்க தொலைபேசி சாதனங்களும் 3G மற்றும் 4G ஆகிய இரு வடிவங்களில் வேறுபட்ட chipset தொழில்நுட்பங்களுடன் கிடைக்கப்பெறவுள்ளன.
இந்த தகவல் தொடர்பில் நாம் நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட போது நிறுவனத்தின் சார்பில் தனது பெயர் விபரங்களை வெளியிட விரும்பாத பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“அடிப்படை ஸ்மார்ட்போன் சந்தையை இலக்காகக் கொண்ட இந்த இரு உற்பத்திகளும் வெகுவிரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அவை ஜுன் மாதத்தின் நடுப்பகுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாரம்பரியமான ஸ்மார்ட்போன்களின் வர்த்தகநாமங்கள் தொடர்பில் சலித்துப் போய் சிறப்பான பெறுபேறுகளைக் கொண்ட ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கின்ற எவரையும் இது கவர்வதுடன்ரூபவ் நியாயமான விலையில் கிடைக்கவுள்ளது என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது. மேலும் இரு வருட சிங்கர் உத்தரவாதத்துடன் கிடைக்கப்பெறுகின்றது” என்று குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டின் இறுதியில் இலங்கையில் அண்ணளவாக 23.08% சந்தைப்பங்கினை Huawei ஸ்மார்ட்போன்கள் கைப்பற்றியுள்ளதாக IDC இன் நான்காவது காலாண்டு அறிக்கை தெரிவிக்கின்றது.
Huawei இலங்கையில் அதன் தேசியளவிலான பிரத்தியேக விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றது. மிகக் குறுகிய காலப்பகுதியில் சந்தை ஸ்தானத்தில் இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியுள்ள Huawei, நாட்டில் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமத்தில் முதலாவது ஸ்தானத்தைக் கைப்பற்றும் இலக்குடன் பயணித்து வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM