கொரோனா வைரஸ் தொற்றை உறுதிப்படுத்த அதிநவீன மருத்துவ  தொழில் நுட்ப இயந்திரங்கள் இலங்கையில் இல்லை : ஆசு மாரசிங்க  

Published By: R. Kalaichelvan

28 Jan, 2020 | 05:18 PM
image

 (ஆர்.விதுஷா)

சீனாவிலிருந்து பரவும் கொரோனா வைரசின் தாக்கத்தினால்  பாதிக்கப்பட்டுள்ள  நாடுகளின் பட்டியலில் இலங்கையும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் , வைரஸ் தொற்று தொடர்பில் உறுதிப்படுத்துவதற்கு  ஏற்ற வகையிலான அதி நவீன தொழில் நுட்ப வசதிகள் நாட்டில்  இல்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின்  பாராளுமன்ற  உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க அவ்வாறான குறைபாடுகள் காணப்படின் அதனை நிவர்த்தி செய்வதற்கு  உடனடி  நடவடிக்கைகளை அரசாங்கம்  முன்னெடுக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தினார்.

இந்த வைரசின் பாரதூரமான விளைவுகளை கருத்தில்  கொண்டு    முன்னெடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில்  கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்  என்பதுடன், சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள  மாணவர்களின் குருதி மாதிரிகளை பரிசோதனைக்கு  உட்படுத்தி அவர்களுக்கு  இந்த வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும் எனவும் அவர் மேலும்   குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமையகமான சிறிகோத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :

கொரோனாவைரசின் தாக்கம் உலகளாவிய ரீதியில் பேசு பொருளாக  மாறியுள்ளது.

சுகாதாரத் துறையை பொறுத்தமட்டில் அதியுயர் அபாயகர எச்சரிக்கை  விடுக்கப்பட்டடுள்ள காலப்குதியாகவே இது காணப்படுகின்றது.   

கடந்த 27 ஆம்  திகதி உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டிருந்த அறிக்கையின் பிரகாரம் , 2498 பேர் வரையில் உலகளாவிய ரீதியில்  கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு  உள்ளாகியுள்ளனர்.

அதேவேளை  ,  2741  பேர் சீனாவில் மாத்திரம் இந்த வைரசின் தாக்கத்திற்கு  உள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 106 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் இலங்கை  உட்பட  11 நாடுகளுக்கு இந்த நோயின் தாக்கம் பரவியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகள்  தொடர்பில் , உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் சுகாதார தரப்பினருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.  

இந்நிலையில்  உயிரியல் பாதுகாப்பு மட்டம் நான்கு வகையாக  பிரிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்றுக்கு உள்ளானவர்களுடைய குருதி மற்றும் ஏனைய மாதிரிகளை சோதனை செய்யும் அதிகாரிகளுக்கும் இந்த வைரசின் தாக்கம் ஏற்படுவதற்காக ஆபத்தான  நிலைமை  காணப்படுகின்றது. 

அத்துடன் வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிக்கு சிகிச்சை  அளிக்கும் வைத்தியர்கள் உட்பட  சுகாதாரத் துறை அதிகாரிகளும்  இதனால் பாதிப்புக்குள்ளாக கூடும்.

அதனை தடுக்க வேண்டியது அவசியமானதாகும். அத்துடன், வைரஸ்  தாக்கத்திற்கு உள்ளானவரிடமிருந்து ஏனைய மனிதர்களுக்கு   வைரசின் தாக்கம் ஏற்படுவதற்கான ஆபத்தான நிலைமை நான்காம்  பாதுகாப்பு மட்டமாகும்.  

ஆகவே  ,இத்தகைய ஆபத்தான நிலைமையை எதிர்கொள்வதற்கு  ஏற்றவகையிலான நடவடிக்கைகளை துரிதமான மேற்கொள்ள  வேண்டியது அவசியமானதாகும். என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38