அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த முதலாம் திகதியிலிருந்து 870 ரூபாவாக இருந்த 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 930 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

குறித்த விலையை விட அதிகமான விலையில் சீமெந்து விற்பனையில் ஈடுபட்ட பொலநறுவை மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்த விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த விலை அதிகரிப்பானது கடந்த  முதலாம் திகதிக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட சீமெந்துகளுக்கு வழங்கப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்