இரத்து செய்யப்பட்ட  உதவி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனங்கள்  மீண்டும் வழங்கப்பட வேண்டும் : சாகல 

Published By: R. Kalaichelvan

28 Jan, 2020 | 06:01 PM
image

 (ஆர்.விதுஷா)

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட 6547 உதவி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி  நியமனங்களை அரசாங்கம் இரத்து செய்திருப்பதனால்  இளைஞர் யுவதிகள்  பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோதாவில் இன்று இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த  அவர்  மேலும் கூறியதாவது  , 

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச்  மாதம் கிடைக்கப்பெற்ற அமைச்சரவை  அனுமதிக்கு இணங்க முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பில் இருந்த தேசிய கொள்கைகள் மற்றும் பொருராதார அலுவல்கள்  அமைச்சினால்  உதவி அபிவிருத்தி உத்தியொகஸ்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட.  அதற்காக  7500  பேர் விண்ணப்பித்ததுடன்,  பொதுப்பரீட்சைகள் வைக்கப்பட்டு அதில்  61 இற்கும் அதிக  மதிப்பெண்களை பெற்ற 6547பேர் தெரிவு செய்யப்பட்டனர். 

அதனை தொடர்ந்து அவர்களுக்கான நியமனப்பத்திரங்கள்  வழங்கப்பட்டதுடன் ,அந்த உத்தியோகத்;தர்கள் இரண்டு தினங்கள் அரசாங்க  சேவைகளில் பணி புரிந்துள்ளனர்.  

தேர்தல் காலமாக இருந்த படியால் தேர்தல்கள் ஆணையாளர் அந்த நியமனங்களை தற்காலிகமாக  நிறுத்தி வைக்குமாறு கூறியதுடன்,தேர்தலை தொடர்ந்து அவர்கள் தொடந்து தொழில் புரிய முடியும் எனவும்  கூறியிருந்தார்.  

ஆயினும் கோத்தாபய ராஜபக்ஷதலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு   வந்ததையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் சட்டத்திற்கு முரணானவை என கூறி இரத்துசெய்துள்ளது.

 ஆகவே, அவ்வாறு தொழில் இரத்து செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் பாரிய பரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் இவர்களுடன்  கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்கான தொழில் வாய்ப்பை மீண்டும் வழங்குமாறும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31