கொரோனா வைரஸ்; மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க நடவடிக்கை

By Daya

28 Jan, 2020 | 01:37 PM
image

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  மேற்கொண்டுள்ளது.

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டின் 14 வைத்தியசாலைகளைச் சுகாதார அமைச்சு தயார் நிலையில் வைத்துள்ளது.

அதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கிழக்கு மாகாணத்திற்கான வைத்தியசாலையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கே.கரலாரஞ்சனி தெரிவித்தார்.

குறித்த கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது குறித்த வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right