சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து வருகை தரும் அனைத்து  இலங்கை மாணவர்களையம் தியத்தலாவையிலுள்ள இராணுவ முகாமில் இரண்டு வாரங்கள் தங்கவைத்து கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் தாக்கத்தால் முதன்முதலில் அந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகர் உள்ளிட்ட சீனாவின் 15 நகரங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறவும் அந்த நகரங்களுக்கு ஏனையோர் பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை சீன அரசாங்கம் தனிமைப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தை சீன அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளார்கள்.

நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ள குறித்த மாணவர்களையே தியத்தலாவையிலுள்ள இராணுவ முகாமில் இரண்டு வாரங்கள் தங்கவைத்து கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கை மாணவர்கள் 204 பேர் சீனாவில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.