ஆஸி. பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு நடால், ஹாலெப் முன்னேற்றம்!

Published By: Vishnu

28 Jan, 2020 | 12:30 PM
image

மெல்போர்னில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்ன்ஸ் தொடரில் 8 ஆவது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் 4 ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-3, 3-6, 7-6 (8-6), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ்சை வெளியேற்றி காலிறுதிக்கு தகுதி பெற்றார். 

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் நடால் காலிறுதிக்கு முன்னேறுவது இது 41 ஆவது முறையாகும். 

காலிறுதியில் ரபெல் நடால்-டொமினிக் திம் மோதுகிறார்கள்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5 ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரியாவின் டொமினிக் திம், 10 ஆம் நிலை வீரரான பிரான்ஸின் கேல் மான்பில்சை எதிர்கொண்டார். 

இந்த ஆட்டத்தில் டொமினிக் திம் 6-2, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் கேல் மான்பில்சை தோற்கடித்து காலிறுதிக்கு முதல்முறையாக முன்னேறினார். .

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 6-2, 2-6, 4-6, 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 4 ஆவது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெட்விடேவை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். 

இன்னொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ரஷியாவின் ஆந்த்ரே ருப்லெவை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி அடைந்தார். 

காலிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், வாவ்ரிங்காவுடன் போட்டியிடவுள்ளார்.

இதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 3 ஆவது இடத்தில் இருப்பவருமான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் எலிஸ் மெர்டென்சை (பெல்ஜியம்) தோற்கடித்து காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். 

இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் வன் வீராங்கனையான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்சை வெளியேற்றி காலிறுதிக்குள் நுழைந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் எஸ்தோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் 6-7 (4-7), 7-5, 7-5 என்ற செட் கணக்கில் 18 வயதான போலந்து வீராங்கனை இகா ஸ்விடேக்கை வீழ்த்தி முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். 

இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் காலிறுதியை எட்டிய முதல் எஸ்தோனியா வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். 

காலிறுதியில் கோன்டாவெய்ட், சிமோனா ஹாலெப்பை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 30 ஆவது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீராங் கனை அனஸ்டசியா பாவ்லிசென்கோவா 6-7 (5-7), 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து 18 ஆம் நிலை வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான ஏஞ்சலிக் கெர்பருக்கு (ஜெர்மனி) அதிர்ச்சி அளித்து 3 ஆவது முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றார். 

காலிறுதியில் பாவ்லிசென்கோவா, கார்பின் முகுருஜாவை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49