இறுதியாக நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அழகான, அன்பான இளைஞராக ரசிகைகளை ஈர்த்தது மட்டுமன்றி, பிக்பாஸ் சீசன் 3இன் வெற்றியாளராகவும் மிளிர்ந்தவரே முகென்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே தன்குடும்ப நிலை குறித்து, சிறு பிள்ளை போல பாசத்திற்காக ஏங்கு முகென் அழுதது எல்லோரையும் மனம் நெகிழ வைத்தது.

இந்நிலையில் அவரின் தந்தை பிராகேஷ் ராவ் நேற்று மாலை 6 மணியளவில் மாரடைப்பால் மரணமாகியுள்ளார். 

முகெனை அதிகமாக நேசித்த பிக்பாஸ் அபிராமி மிகுந்த சோகத்துடன் முகென் அப்பா மரணம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் வனிதா, கவின் ரசிகர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.

 மேலும், தந்தையின் இழப்பால், முகென் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.