கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல்களை பெற அல்லது ஆலோசனைகளை வழங்க தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 24 மணிநேரமும் சேவையினை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள 0710107107 அல்லது 0113071073 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல்களை பெற முடியுமென சுகாதார அமைச்சசு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.