இந்­திய விமா­னப்­ப­டையின் ஹொக்கி அணி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு இலங்கை விமா­னப்­படை அணி­யுடன் மோத­வுள்­ளது.

இலங்கை வரும் இந்­திய விமா­னப்­படை ஆண்கள் ஹொக்கி அணி­யினர் இங்கு இரண்டு போட்­டி­க­ளில் மோத­­வுள்ளனர். 

இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான நட்­பு­றவு ஹொக்கிப் போட்­டி­களில் முதல் போட்டி எதிர்­வரும் 13ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இதன் இரண்­டா­வது போட்டியை எதிர்­வரும் 16ஆம் திகதி விளை­யா­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக இலங்கை விமா­னப்­படை தெரி­வித்­துள்­ளது.

இலங்கை வரும் இந்­திய விமானப்­ப­டையின் ஹொக்கி அணி­யினர் இலங்­கையின் பல பகுதிகளுக்கு சுற்றுப்பய ணம் மேற்கொள்ள வுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.