கொரோனா வைரஸின் எதிரொலி ! ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை !

By T. Saranya

28 Jan, 2020 | 01:08 PM
image

கொரோனா  வைரஸ்  தாக்கத்தையடுத்து சுகாதார நடைமுறைகளை பேணுவது தொடர்பில் ஹோட்டல்  உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா ஹோட்டல் சங்கம் (THASL) தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர், குறிப்பாக ஒவ்வொரு  30 நிமிடங்களுக்கும் கை கழுவுதல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மேலும், "பணியாளர்கள் மற்றும் விருந்தினர்களின் நலனை கவனமாக கண்காணிக்க வேண்டும்" அத்தோடு நிலைமை மோசமடைந்தால்  உடல் வெப்பநிலையை கண்காணிக்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்களுக்கு இலங்கை சுற்றுலா ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து விருந்தினர்களின் தரவுகளை உறுதிப்படுத்த முழுமையான தொடர்புத் தகவல் தேவைப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நோய் தொற்று நபலையும் கண்டுபிடிக்க முடியும். அந்த நபர் தொடர்பு கொள்ளக்கூடிய எவரையும் தொடர்பு கொள்ளலாம்.

பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சுத்திகரிப்பு இரசாயனங்கள் உடனடியாக கிடைக்க கூடியதாக இருக்க வேண்டும்.

மேலும் N95 வகை முகமூடிகள் சூழ்நிலைகளில் மிகவும் பொருத்தமானவை என்று கூறப்படுகிறது.

மேலும், விருந்தினர் பகுதிகள், முன் மேசை மற்றும் உணவகங்களில் கை சுத்திகரிப்பு உபகரணம் (  hand sanitizers) கிடைப்பதை உறுதி செய்ய ஹோட்டல்களை இலங்கை சுற்றுலா ஹோட்டல் சங்கம் கோரியுள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்து, விழிப்புடன் இருக்கவும், நல்ல சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது பீதி அடைவதற்கான அறிவுறுத்தல்கள் அல்ல, எச்சரிக்கையாகவும் தயாராகவும் இருக்குமாறு உறுப்பினருக்கு அனுப்பப்பட்ட அறிவுறுத்தல்கள் என இலங்கை சுற்றுலா ஹோட்டல் சங்கம் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right