அலபாமா துறைமுகத்தில் பாரிய தீ ; 35 படகுகள் தீக்கிரை, 8 பேர் உயிரிழப்பு!

By Vishnu

28 Jan, 2020 | 11:13 AM
image

அமெரிக்காவின், அலபாமாவில் உள்ள துறைமுகத்தில் உள்ள சுமார் 35 படகுகள் தீப்படித்து எரிந்தமையினால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் இவ்வாறு உயிரிழந்தவர்கள் எவரும் இதுவரை அடையாளப்படுத்தப்படவில்லை.

அத்துடன் இந்த அனர்த்ததில் சிக்குண்ட மேலும் ஏழு பேர் ஏரியில் குதித்து பாதுகாப்பாக நீந்தி கரைசேர்ந்துள்ளதுடன், அவர்கள் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணங்கள் இன்னும் வெளியாகாத நிலையில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட அனைத்து படகுகள் அனைத்தையும் சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right