கொஸ்கம சாலாவ பகுதியில் 80 சதவீதாமான வெடிபொருட்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப். கேர்ணல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

விரைவில் அனைத்து வெடிபொருட்கள் மற்றும் குப்பைகள் அப்புறப்படுத்தப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் (10) சட்ட  ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன ஆகியோர் சமுகமளித்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளனர்.

இதேவேளை நாளைய தினம் சாலாவ பகுதிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமுகமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.