ஈரானின் தெஹ்ரானில் இருந்து புறப்பட்டு நாட்டின் தென்மேற்கில் உள்ள மஹ்ஷாஹர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட பயணிகள் விமானமொன்று திடீரென அங்குள்ள நகரமொன்றின் வீதியில் தரையிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

135 பயணிகளுடன் பயணித்த விமானமே இவ்வாறு ஈரானின் நகரமான மஹ்ஷாரில் உள்ள வீதியில் தரையிறங்கியுள்ளது.

அத்தோடு விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்விதமான உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லையென அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு விமானம் திடீரென வீதியில் தரையிறங்கிய நிலையில் வீதியில் பயணித்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வீதியில் இறங்கிய விமானத்தின் சக்கரங்கள் உடைந்த நிலையில் காணப்படும் புகைப்படங்கள்  சமூகவளைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

குறித்த இச் சம்பவம் நேற்று காலை எற்பட்டுள்ளதோடு , 6936 என்ற இலக்கம் உடைய விமானமே இவ்வாறு தெஹ்ரானில் இருந்து புறப்பட்டு நாட்டின் தென்மேற்கில் உள்ள மஹ்ஷாஹர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஏற்பட்ட கோளாறு காரணமாக வீதியில் தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.