கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சீன நாட்டினருக்கான விசா வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி சீன சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்தடன் வீசா வழங்கும் முறை (On arrival visas) உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் உள்ள சீனவினர் அவர்களது நாட்டிற்கு செல்வதில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.