கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கை மாணவர்கள் 204 பேர் சீனாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்தோடு குறித்த மாணவர்களை நான்கு விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அத்தோடு சீனாவில் கல்வி பயின்ற இலங்கை மாணவர்கள் பலர் தற்போது இலங்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இவர்களில் 50 மாணவர்கள் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்ததாக விமான நிலைய சுகாதார வைத்தியப்பிரிவின் வைத்தியர் சந்திக்க பண்டார விக்கிரமசூரிய தெரிவித்தார்

மாணவர்களுடனான முதலாவது விமானம் மாலை 5.54க்கும் இரண்டாவது விமானம் 6.34க்கும் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. 

இவர்கள் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாகவும் இவர்கள் வீடு திரும்பிதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை சீனாவிலிருந்து அழைத்துவருவதில் ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, சீனாவுக்கான இலங்கைத் தூதரகம், ஸ்ரீ லங்கன் விமானசேவை ஆகிய நிறுவனங்கள் பங்களித்துள்ளன.

சிச்சுவான் மாகாணத்திலும் ஏனைய இடங்களிலும் உள்ள இலங்கை மாணவர்களை விமான நிலையத்திற்கு பஸ் மூலம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சீனாவிலிருந்து வரும் இந்த மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இவ்வாறு வரும் மாணவர்கள் குறைந்தபட்சம் 20 நாட்கள் பாதுகாப்பான முகமூடியை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவி வரும் கொரோனோ வைரஸ் காரணமாக தற்போது வரை 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த பிரதேசத்தில் உள்ள இலங்கை மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.