இலங்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீனப் பெண் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான குறித்த சீனப் பெண் ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவின் ஹுபி மாகாணத்தில் இருந்து வந்த 43 வயதுடைய பெண்ணிடமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இனம்காணப்பட்டுள்ளது.