சீனாவில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட 21 மாணவர்கள்

Published By: Digital Desk 3

27 Jan, 2020 | 05:31 PM
image

சீனாவில் கல்வி கற்கும் 21 மாணவர்கள் தற்போது சீனாவிலிருந்து இலங்கைக்கு வர புறப்பட்டுள்ளார்கள்.

21 மாணவர்கள் கொண்ட குழு இன்று பிற்பகல் இலங்கைக்கு புறப்பட்டுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள் காட்டி வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் அலுவலகம், வெளிவிவகார அமைச்சகம், சுகாதார அமைச்சகம்,சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து நாட்டிற்கு மாணவர்களை அழைத்துவரும் பணியை மேற்கொண்டனர்.

சிச்சுவான் மற்றும் சீனாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பேருந்து மூலம் விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், நானிங் நகரில் மீதமுள்ள 30 மாணவர்களும் அவர்களுடன் இணைவார்கள் எனவும் தற்போது  வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தை சீன அரசாங்கத்துடன் தற்போது  நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 50 சதவீத தள்ளுபடியில் மாணவர்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. விமான நிறுவனத்துடன் அதன் ஹொட்லைன் மூலம் இணைக்க வசதிகள் உள்ளன. மூன்றாம் தரப்பு கடன் அட்டைகள் மூலம் பணம் செலுத்தவும் அனுமதிக்கப்படுகிறது.

சீனாவில் மாணவர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது இப்போது நிறைவடைந்துள்ளது. சுகாதார நிபுணர்களைக் கொண்ட கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைக் குழு ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் நியமிக்கப்பட்டது. இந்த குழு இன்று கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் உடல்நலம் குறித்து அடிக்கடி தொடர்புகொள்கிறார்கள். சீனாவிலிருந்து வந்தவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனையில் கலந்து கொள்ளவும், அவர்களின் உடல் வெப்பநிலை குறித்து விழிப்புடன் இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

குறைந்தது 20 நாட்களுக்கு முகமூடிகளை அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், சீனாவிலிருந்து திரும்பும் பயணிகளுக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தனி வருகை முனையத்தை  சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46