நாட்டின் 72 ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அன்று அனைத்து வீடுகளிலும் மற்றும் வர்த்தக நிலையங்களிலும், அலுவலகங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இன்றைய தினம் வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள முன்னோட்ட நிகழ்ச்சிகள் எதிர்வரும் 26ஆம், 31ஆம் திகதிகளிலும், பெப்ரவரி மாதம் முதலாம், 2ஆம், 3ஆம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளன.

 

இதற்கமைவாக, விசேட வாகன போக்குவரத்து ஒழுங்கமைப்புகளும்  மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.