கிழக்கு ஆப்கானிஸ்தானில் 83 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காபூலின் தென்மேற்கே கஸ்னியின் தே யாக் மாவட்டத்திலேயே இந்த விமானம் அந் நாட்டு நேரப்படி பிற்பகல் 1.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விமானம் தீப் பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விமானமானது அரியானா ஏர்லைன்ஸ் வகையைச் சேர்ந்தது என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டாலும். எனினும்  தற்போது இதற்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

எவ்வாறெனினும் இந்த விமான விபத்தினால் உண்டான சேத விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.