முன்னாள் கடற்படை ஊடக செய்தித் தொடர்பாளர் கொமடோர் டி.கே.பி தஸநாயக்க மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடை ஆகியோருக்கு எதிரான நீதிமன்றை வழக்கை இடை நிறுத்துமாறு கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற பாதிப்புக்கள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு தகவல் அளித்துள்ளது.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பாகவே வசந்த கரன்னாகொட மற்றும் தஸநாயக்க உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.