கொரோனா வைரஸால் பாதிப்படைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் 100 க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

எனினும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ரஷ்யா இன்னும் உறுதியாக கூறவில்லை.

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,744 ஆக அதிகரித்துள்ளதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சீனா முக்கிய நகரங்களுக்கும் தடைகளை விதித்துள்ளது, அதே நேரத்தில் பல நாடுகள் நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

இந் நிலையில் கொரோனா தெற்று நோயின் அறிகுளைக் கொண்ட 100 க்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இவர்களில் பலர் கடந்த காலங்களில் சீனாவுக்கும் சென்று வந்துள்ளனர். இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் அனுமதித்து விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனினும் வைத்திய அதிகாரிகள் இதுவரை இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதியாக கூறவில்லை.

இதேவேளை கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கவும் இரண்டு ரஷ்ய ஆய்வகங்கள் போராடி வருகின்றன.