கட்சி வேறுபாடுகளின்றி மக்கள் சேவையை வழங்க ஆதரவு வழங்க வேண்டும் - வடக்கு ஆளுநர்

27 Jan, 2020 | 04:31 PM
image

ஆளும் கட்சி,எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் இணைந்து மக்களுடைய சேவையினை முடக்காது செயல்படுவதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு வட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதி உதவியுடன் மன்னார் அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்ட மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க அலுவலக கட்டிட திறப்புவிழா  இன்று (27) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. 

குறித்த கட்டிடத்தை வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சார்ஸ்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இவ் நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றிய போதே வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சார்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'கூட்டுறவே நாட்டுறவு' என்று சொல்வார்கள்.நீங்கள் எல்லோறும் இணைந்தால் தான் ஒரு பிரதேசத்தை, மாவட்டத்தை, ஒரு மாகாணத்தை உயர்த்த முடியும் என்ற சிந்தனை உங்கள் அனைவருடைய மனதிலும் இருக்கின்றது.

ஒரு மாகாணத்தை எடுத்துப் பார்த்தால் அந்த மாகாணத்திலே அடிப்படையிலே இயங்கி வருகின்ற அமைப்புக்களில் மூன்று அமைப்புக்களை நாங்கள் கூற முடியும்.

கூட்டுறவு,கிராம, மாதர் அபிவிருத்தி சங்கங்கள்,மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றவர்கள் அதிக அளவில் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள்.

-மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக மக்களின் சேவைகளை முன்னெடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய எதிர் பார்ப்பும்.எக்கருத்துக்களை கொண்டவர்களாகவும் இருக்கலாம்,எந்த கட்சியை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்,எந்த மதத்தையும், இனத்தையும் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.

ஒரு பிரதேசத்தில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் தமது கிராமங்களில் ஒருவரை தெரிவு செய்து பிரதி நிதிகளாக அனுப்புகின்றனர்.

கடந்த வாரத்தில் இந்த மாகாணத்திலே இரண்டு பாரிய பிரச்சினைகள் இடம் பெற்றுள்ளது. யாழ் மாநகர சபையிலே மூன்று நாட்களாக குப்பைகளை எடுக்கவில்லை.அதே போல வவுனியா நகரத்திலே தொடர்ந்து ஒரு வாரம் குப்பைகள் அகற்றப் படவில்லை.

இதற்கு பின்னனியாக என்ன காரணங்கள் இருந்தாலும் சபைகளிலே இருக்கின்ற அனைவரும் அதாவது ஆளும் கட்சி,எதிர்க் கட்சி என்ற வேறு பாடுகள் இல்லாமல் அனைவருமே இணைந்து மக்களுடைய சேவையினை முடக்காது செயல்படுவதற்கு ஆதரவு வழங்க வேண்டும். இதனைத்தான் நாங்கள் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்.

நாங்கள் அரச சேவையினை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் மக்களின் பிரதி நிதிகள் உங்களின் ஒத்துழைப்புக்களை எங்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும். இல்லாது விட்டால் அந்த சேவை அடி மட்டத்தில் மக்களை சென்றடையாது. என்று அவர் தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில், 

அந்த வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விவசாயிகளின் நெல்லிற்கான உரிய விலையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என என்னிடம் கேட்டுக்கொண்டார்.

அண்மையில் கொழும்பில் ஜனாதிபதி, ஆளுனர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி இருந்தோம்.

அக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மிக முக்கியமாக எங்களிடம் கூறிய விடையம் நாட்டில் இருக்கின்ற அனைத்து விவசாயிகளினுடைய நெல்லையும்.உரிய விலையில்,உரிய நேரத்தில் கொள்வனவு செய்யும் படி வழியுறுத்தி உள்ளார்.

அதற்கான சுற்று நிருபங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நெல்லின் விலையும் ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் நெல் சரியாக காயவைக்கப்பட்டால் ஒரு கிலோ 50 ரூபாவிற்கும்,ஈரப்பதன் கொண்ட நெல் ஒரு கிலோ 47 ரூபாவிற்கும் நெல்லை கொள்வனவு செய்ய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

உடனடியாக அரசாங்க அதிபரின் அனுசரனையுடன் கூட்டுறவுச் சங்கங்களை உடனடியாக நெல்லை குறித்த விலைக்கே கொள்வனவு செய்வதற்கான உத்தரவை வழங்கியுள்ளேன்.

அவர்களுக்கான நிதி வசதிகள்,நிதி ஏற்பாடுகள் அரச அதிபர்,பிரதம செயலாளர் ஆகியோரின் ஆலோசனைகளுடன் உடனடியாக செய்து கொடுக்கப்படும்.எனவே உங்களுடைய நெல்லை உரிய விலைக்கு விற்பனை செய்ய நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.என தெரிவித்தார். குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர்,திணைக்கள தலைவர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர்,மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர்,மந்தை மேற்கு பிரதேச செயலாளர், பலநோக்கு கூட்டுறவுச் சங்க பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45