அவுஸ்திரேலியாவின் தேசிய தின நிகழ்வில் கேக் சாப்பிடும்போது வயோதிப பெண் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் தேசிய தின நிகழ்வை முன்னிட்டு குயின்ஸ்லாந்தில் லமிங்டன் (lamington) எனப்படும் அவுஸ்திரேலியர்களின் பாரம்பரிய கேக் வகையை விரைவாக சாப்பிடும்போட்டி இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் கலந்து கொண்டு லமிங்டன் கேக்கை விரைவாக சாப்பிட்டுக் கொண்டிருந்த போது 60 வயதான பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் குறித்த இடத்திற்கு வைத்தியர்கள் வரும் வரை மூச்சுத்  திணறிய பெண்ணுக்கு முதலுதவிகள் அளிக்கப்பட்டபோதும் அவர், பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நிகழ்வானது இடம்பெற்ற பீச் ஹவுஸ் ஹோட்டலின் நிர்வாகமும், ஊழியர்களும் உயிரிழந்த குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபவங்களை தெரிவித்துள்ளது.