ரஷ்யாவின் கபரோவ்ஸ்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் வெடி குண்டு மிரட்டலைத் தொடர்ந்து மீண்டும் அதே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

கபரோவ்ஸ்க்கிலிருந்து மொஸ்கோ நோக்கி புறப்பட்ட விமானமே இவ்வாறு ஒரு மணி நேரத்தில் அவசரமாக  இன்றைய தினம் தரையிறக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதன்போது விமானத்தில் 262 பயணிகளும், 10 விமான பணியாளர்ளும் இருந்துள்ளனர்.

கபரோவ்ஸ்க் விமான நிலையத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரே விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் உள்ளதாக தகவல் வழங்கியிருந்தார். எவ்வாறெறினும் இது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.