வவுனியா  மாவட்ட அரச அதிபர் பதவியேற்பு!

27 Jan, 2020 | 12:43 PM
image

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக எஸ்.எம்.சமன் பந்துலசேன இன்று திங்கட்கிழமை பதவியேற்றுள்ளார்.

இதுவரை வவுனியா அரசாங்க அதிபராக இருந்த ஐ.எம் கனீபா பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு  இடமாற்றம் பெற்றுச் செல்லும் நிலையில், அனுராதபுர மாவட்டத்தின் உதவி‌ அரசாங்க அதிபராகவும் பின்னர் வடமத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேன, புதிய அரசாங்க அதிபராக பதவியேற்றுள்ளார்.

தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் நான்கு மதங்களையும் சேர்ந்த மதகுருமார் ஆசிகளை வழங்கியிருந்தனர். இதனையடுத்து புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு ஆரம்பித்திருந்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

2026-04-20 09:13:14
news-image

மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-04-20 08:44:54
news-image

மஹரகமவில் வீட்டிற்கு தீ வைப்பு ;...

2026-04-20 08:59:20
news-image

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை...

2026-04-20 08:47:44
news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05