சம்­பந்­த­னு­டைய கடந்த கால செயற்­பா­டுகள், இலங்­கையில் வாழு­கின்ற தமி­ழர்­களை ஒற்­று­மைப்­ப­டுத்­தி­யதாக இருந்­ததே தவிர, வேற்­று­மை­ப்ப­டுத்­தி­ய­தாக இருக்­க­வில்லை. ஆனால் ஒரு சில அர­சியல் சுய­ந­ல­வா­திகள் சம்­பந்­தனை தவ­றாக வழி­ந­டத்தப் பார்க்­கி­றா­ர்கள். எனவே தமி­ழ­ரசு கட்சி அர­சியல் சுய­ந­லங்­க­ளுக்­காக பிர­தேச வாதத்தை தூண்டக்கூடாது என ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாய­க­மான  கே.ரீ.குரு­சாமி வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இது  தொடர்­பாக அவர் விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவ்­வ­றிக்­கையில் மேலும்  தெரி­வித்­துள்­ள­தா­வது,

‘‘கொழும்பில் கள­மி­றங்­கு­வதா? இல்­லையா? சம்­பந்தன் தலை­மையில் தமி­ழ­ரசுக் கட்­சியின் கொழும்­புக்­கிளை ஆராய்வு’’ என்ற தலைப்­பி­லான செய்­தியை படித்த போது ஒரு அர­சியல் பிர­மு­க­ரா­கவும், தமிழ் ஆர்­வ­ல­ரா­கவும் செயற்­படும் எனக்கு அச்­செய்தி மிகவும் ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யது.  அந்த செய்­தியை முழு­மை­யாக படித்­த­போது இக்­கூட்­டத்­திலே கலந்துகொண்ட இரா.சம்­பந்தன் கூறி­ய­தாக, ‘இன்­னொரு சிறு­பான்மை இனத்தின் பிர­தி­நி­தித்­து­வத்தை மற்­று­மொரு சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளான வடக்கு–கிழக்கு தமி­ழர்கள்’’ என்ற வரி­களும், ‘‘வட கிழக்­கிற்கு அப்பால் இலங்கை தமி­ழர்கள் அதி­க­மாக வாழ்­வது மேல் மாகா­ணத்தில் தான்’’ என்ற வரி­களும் அர­சியல் சுய­ந­லன்­க­ளுக்­காக தமிழ் மக்­களை கூறு­போட்டு வாக்கு சேக­ரிக்கும் தந்­திரம் கையா­ளப்­பட்­டுள்­ளதை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம்.

இலங்­கை­யிலே வாழக்­கூ­டிய ஒட்­டு­மொத்த தமி­ழி­னத்தின் தேவை­களை கருத்­திற்­கொண்டு அதற்­கேற்­றால்போல் செயற்­ப­டு­மாறு அன்பு வேண்­டு­கோள்­ விடுக்­கின்றோம். இலங்­கை­யிலே வாழு­கின்ற ஒட்­டு­மொத்த தமி­ழர்­களும் சிறு­பான்­மை­யி­ன­ராக இருக்­கும்­போது ஒரு சிறு­பான்மை மற்­று­மொரு சிறு­பான்மை என தமி­ழர்­களை பிர­தேச ரீதி­யாக  பிரித்­தாள்­வது சரியா?

இன்று இலங்கை வாழ் தமி­ழர்கள் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மீது அள­வு ­க­டந்த அன்பும், மரி­யா­தை­யையும் வைத்­தி­ருக்­கின்­றார்கள். சம்­பந்தன் தலை­வ­ராக இருக்­கின்ற காலத்­தி­லேயே வட­கி­ழக்கு தமி­ழர்­க­ளு­டைய உரி­மை­ சார்ந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடி­யா­விட்டால், பின் எப்­போ­துமே அது சாத்­தி­யப்­ப­டாது என்­பது அர­சியல் வல்­லு­நர்­களின் கருத்­தா­கவும் இருக்­கின்­றது. சம்­பந்­த­னு­டைய கடந்த கால செயற்­பா­டுகள், இலங்­கை­யிலே வாழு­கின்ற தமி­ழர்­களை ஒற்­று­மைப்­ப­டுத்­தி­யாக இருந்­ததே தவிர, வேற்­று­மை­ப்ப­டுத்தி அவர் பேசி­ய­து ­கி­டை­யாது. ஒரு சில அர­சியல் சுயநல­வா­திகள், அல்­லது அர­சியல் மேதா­விகள் சம்­பந்­தனை தவ­றாக வழி­ந­டத்­தி­வி­டக்­கூ­டாது என்­பது எமது வேண்­டுதல். மனோ கணேசன் தலை­மை­யி­லான கட்­சி­யினர் ஏற்­க­னவே தலை­ந­க­ரிலே சகல தமிழ் மக்­க­ளையும் அர­வ­ணைத்து செயற்­ப­டு­கின்ற ஒரு அர­சியல் கட்­சி­யாக செயற்­பட்டு வரு­வ­தையும் இரா.சம்பந்தன் ஒத்­துக்­கொண்டிருக்­கின்றார்.

ஜன­நா­யக நாட்­டிலே எந்­த­வொரு அர­சியல் கட்­சியும் எப்­பி­ர­தே­சத்தில் வேண்­டு­மா­னாலும் போட்­டி­யி­டலாம். அதற்கு யாரும் தடை­வி­திக்க முடி­யாது. ஆனால், ஒரு அர­சியல் கட்­சியின் சார்­பா­கவோ அல்­லது சுயேச்­சை­யா­கவோ போட்­டி­யிடும் நபர் அப்­பி­ர­தேச மக்­க­ளு­டைய கடந்த கால செயற்­பா­டுகள் அவர்­க­ளு­டைய நியா­ய­மான தேவைகள், கள நிலை­வ­ரங்கள் போன்­ற­வற்றை அறிந்­த­வ­ராக இருக்­க­வேண்டும். அதை­வி­டுத்து தமி­ழ­ரசுக் கட்­சியின் நீண்­டநாள் உறுப்­பினர் என்­ப­தற்­கா­கவோ, அர­சியல் சார்­பான விட­யங்­களை ஊட­கங்­க­ளிலே எழுதி வந்­ததன் கார­ண­மா­கவோ அதற்கு மேலா­கவும் தோல்வி அடைந்­தாலும் பர­வா­யில்லை. தேர்தலிலே போட்­டி­யி­ட­வேண்டும் என்ற தனிப்­பட்ட ஆசையை நிறை­வேற்றிக் கொள்­ப­வ­ரா­கவும் இருக்கக்கூடாது. வடக்கு–கிழக்கு, மலை­யக பிர­தே­சங்­களிலிருந்து கொழும்­பிலே குடி­யேறி பல ஆண்டு கால­மாக வாழ்ந்­து­வ­ரு­கின்ற ஒரு பரம்­பரை இருக்­கின்­றார்கள். அவர்­க­ளிடம் இது­வ­ரை­யிலும் எந்­த­வொரு பிர­தேச வாதத்­தையும் நாம் பார்க்­க­வில்லை. அவ்­வாறு வாழ்ந்து வரு­கின்ற தமிழ் நபர்­க­ளு­டைய கடந்த கால மக்­க­ளுக்­கான ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களை அவ­தா­னித்து முடி­வெ­டுக்­க­லாம். குறிப்­பாக கம்­ப­வா­ரிதி இ.ஜெயராஜ் போன்ற  கொழும்பு கம்பன் கழக நிர்­வா­கிகள் நாம் மேற்­கூ­றிய தமிழ் சமூக மேம்­பாட்டு செயல்­களில் தங்­களை ஈடு­ப­டுத்தி அர்ப்­ப­ணித்து செயற்­பட்டு வரு­வதை நாம் இந்த இடத்­திலே குறிப்­பிட்டே ஆக வேண்டும்.

தமிழ் மக்­களை மாத்­தி­ர­மன்றி தமிழ் ஆர்வலர்களான முஸ்லிம் மக்களையும் ஒன்றிணைத்து செயற்பட்டுவருவதை கொழும்பு வாசிகளான நாம் அறிந்திருக்கின் றோம். கொழும்பிலே போட்டியிட விரும்புகின்ற எந்தவொரு அரசியல் கட் சியும் தாராளமாக போட்டியிடலாம். ஆனால் அதற்கு முன்னதாக இன்றைய அரசியல் சூழ்நிலைகளை தமது சொந்த சுயநலன்களுக்காகவோ அல்லது தமது எதிர் அரசியல் பிரமுகர்களை பழிவாங்குவதற்காக வோ பயன்படுத்திக்கொள்ளாமல் இனவாத அரசியல் தலைவிரித்தாடும் இன்றைய சூழ்நிலையில் தமிழர்களது எதிர்காலம் குறித்து நியாயமான தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.